இதற்கடுத்தபடியான சாதனை போலியோ ஒழிப்பு. 2009ல் நாடு முழுவதும் 741 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரத்தில் தெரியவந்தது. 2010ல் வெறும் 42 ஆகவும், 2011ல் ஒன்றாகவும் குறைந்தது. அதன்பின்னர், போலியோவால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. அதாவது, இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போலியோவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை, 2012 பிப்ரவரி 24ல் உலக சுகாதார அமைப்பு நீக்கியது.
இதற்கான சான்றிதழை அடுத்த மாதத்தில், உலக சுகாதார அமைப்பு முறைப்படி அளிக்க உள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில், போலியோவை முற்றிலும் ஒழித்த பெருமையை பெறும் ஒரே நாடு இந்தியா என்பது, எல்லோரும் மார்தட்டிக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம்.ஏனெனில், ஒரு காலத்தில் போலியோவில் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் நிறைந்த நாடாக இந்தியா இருந்தது. இந்தியர்கள் நினைத்தால் எதையும் சாதித்து காட்டுவார்கள் என்பதற்கு மற்றொரு மிகப்பெரிய உதாரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டன.முகாம்கள் குறித்து ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நடிகர், நடிகைகளும், சமூக பொறுப்பு உணர்வுடன் இலவசமாக அரசின் விளம்பரத்தில் நடித்து கொடுத்தனர். மேலும், போலியோவின் பாதிப்புகளை உணர்ந்த மக்கள், ஒருவருக்கு ஒருவர், இதுகுறித்து தகவல் பரிமாறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 24 லட்சம் செவிலியர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்டோரால் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. இதன் பலனைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம். ஒன்று சேர்ந்தால், உண்டு நன்மை என்பதற்கு இதை விட பெரிய முன்னுதாரணத்தை கூறிவிட முடியாது.
இமாலய சாதனைக்கு இடையே நெஞ்சை பிசையும் சில அசம்பாவிதங்கள் ஒவ்வொரு போலியோ சொட்டு மருந்து முகாமின் போதும் நடப்பதை தவிர்க்க முடியவில்லை. நேற்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் 2 குழந்தைகள் இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. முகாம்களில் சொட்டு மருந்து கொடுக்கும் போதும், கொடுத்த பின்னும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தாய்மார்களுக்கு விளக்கப்பட்டால், இந்த துயரங்களையும் தடுக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே