இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக், இயான் பெல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த போது குக் (22) அவுட்டானார். அடுத்து வந்த ஜோ ரூட் (2), கேரி பேலன்ஸ் (9) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய பெல் அரைசதம் அடித்தார். இவர் 68 ரன்கள் எடுத்த போது ரன்–அவுட் ஆனார். பின் அபாரமாக ஆடிய மார்கன் சதம் அடித்தார். இவர் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரவி போபரா (24), ஜாஸ் பட்லர் (45) பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஸ்டோக்ஸ் டக்–அவுட் ஆனார்.இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்தது. பிரஸ்னன் (1), ஜோர்டான் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கவுல்டர்–நைல், பால்க்னர், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் டக்–அவுட் ஆகி ஏமாற்றினார். பின் வந்த வார்னர் (18), கிளார்க் (17) நிலைக்கவில்லை. மார்ஷ் (55), மேக்ஸ்வெல் (54) அரை சதம் கடந்தனர். பெய்லி (24), ஹாடின் (26) விரைவில் வெளியேறினர். கவுல்டர்–நைல் (16) நீடிக்கவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் பால்க்னர் களம் கண்டார். இவர் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்கள் விளாசினார். 49வது ஓவரை மீண்டும் வீசிய ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பால்க்னர் இரண்டு சிக்சர் அடித்து அரை சதம் எட்டினார். ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால்க்னர் (69), மெக்கே (2) அவுட்டாகாமல் இருந்தனர். பால்க்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே