வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை வென்றது நியூசிலாந்து…

வெலிங்டன்:-நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது.2-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராம்டின் 55 ரன்னும் (நாட்-அவுட்), பிளட்சர் 40 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மிலின் 2 விக்கெட்டும், மெக்லகன், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லுக் ரோஞ்ச் 51 ரன்னும் (நாட்-அவுட்), ராஸ் டெய்லர் 39 ரன்னும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர், சுனில்நரின், ரஸ்செல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து வீரர் லுக் ரோஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago