விஜய் படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதேபோல சமீபத்தில் ரிலீஸான மோகன்லாலில் த்ரிஷம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மோகன்லால் இமேஜ் கேரளாவில் மிக அதிகமாக கூடியிருந்தது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன ஜில்லா கேரள ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் கிடைத்ததாக கூறப்படுகிறது.நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களை பார்த்து பழகிவிட்ட கேரள ரசிகர்கள் இப்படி ஒரு அரதப்பழசான கதையை பார்த்து பெரும் ஏமாற்றம் அடைந்தனர். லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் பல காட்சிகளை தியேட்டரிலேயே கேலி செய்ததை பார்க்க முடிந்தது.
சம்பளத்திற்கு பதிலாக கேரள உரிமையை வாங்கியிருந்த மோகன்லால் பெரும் ஏமாற்றம் அடைந்தார் என்பதுதான் உண்மை. ஆனாலும் வரிசையாக பொங்கல் விடுமுறை இருப்பதாலும் , வேறு படங்கள் ரிலீஸ் ஆகாததாலும் ஓரளவிற்கு வசூல் வரும் என மோகன்லால் எதிர்பார்க்கிறார். ஆனாலும் முதல் நாளிலேயே படம் வெகுசுமார்தான் என்ற கருத்து கேரளா முழுவதும் பரவிவிட்டது என்பதால் மோகன்லால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது என்கிறனர் விநியோகிஸ்தர்கள்
ஏற்கனவே மணிரத்னத்தின் ;’இருவர்’ படத்தை மோகன்லால் தனது சம்பளத்திற்கு பதிலாக உரிமையை வாங்கி வெளியிட்டார். அந்த படம் மோகன்லாலுக்கு பலத்த நஷ்டத்தினை கொடுத்தது. ஜில்லா படத்தால் மோகன்லாலுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கண்டிப்பாக லாபம் கிடைக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிந்துவிட்டதால் மோகன்லால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே