பெண் சிங்கம், பொய், வம்பு சண்டை போன்ற தமிழ் படங்களில் நடித்த உதய் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தமிழ், தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உதய் கிரணுக்கு 33 வயதுதான் ஆகிறது. 19 தெலுங்கு படங்களில் நடித்து ஆந்திராவில் முன்னணி நடிகராக திகழ்ந்தார் . ஐதராபாத், ஸ்ரீநகர் காலனியில் வசித்த அவர் நள்ளிரவு 12.15 மணிக்கு தூக்கில் தொங்கினார். இறப்பதற்கு முன் கடிதம் ஏதேனும் எழுதி வைத்து இருந்தாரா என்று தேடுகின்றனர். உதய் கிரணுக்கு வந்த போன் நம்பர்களையும் போலீசார் ஆய்வு செய்கிறார்கள். கடைசியாக உதய் கிரண் சென்னையில் உள்ள அவரது நண்பர் “பூபாலுக்கு” போன் செய்துள்ளார். பிரேத பரிசோதனையில் உதய்கிரண் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
போலீஸ் துணை கமிஷனர் சத்யநாராயணனா கூறும்போது, ‘‘உதய்கிரண் சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்தார் என்றும், அதுவே தற்கொலைக்கு காரணமாக இருந்தது என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் ஆஸ்பத்திரியில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும்’’ என்றார்.
உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகினரை துக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகை குஷ்பு கூறும்போது, ‘‘உதய்கிரண் இளம் நடிகர். திறமையானவர். அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியானேன்’’ என்று கூறினார்.
நடிகை பிரியாமணி கூறும்போது, ‘‘உதய் கிரண் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டுக் கொண்டேதான் காலையில் எழுந்தேன். எனக்கு தெரிந்த நண்பர்களில் அவர் இனிமையானவர். அவரது மரணம் என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது’’ என்று கூறினார்.
நடிகை விமலாராமன் கூறும்போது, ‘‘என் திரையுலக வாழ்க்கையில் உதய்கிரண்தான் எனது முதல் ஜோடி. ரொம்ப இனிமையானவர். அவரை இழந்துவிட்டோம்’’ என்று கூறினார். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சந்தீப்கிஷன் போன்றோரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே