தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தவர்களுக்கு “அரசு” ஆஸ்பத்திரியில் வேலை வழங்கும் விதமாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று “சென்னை ஐகோர்ட்டு” உத்தரவிட்டுள்ளது.
“சென்னை ஐகோர்ட்டில்” வைத்திலிங்கம் உள்பட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஜனவரி 18, 2012 ஆம் ஆண்டு அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், தனியார் நிறுவனத்தில் நர்சிங் படிப்பவர்களுக்கும், அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கும், இணையாக தேர்வு நடத்தப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சு பணி நியமனத்துக்காக இந்த இருதரப்பினரும் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக, அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சு பணிகளுக்கு, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டும்தான் நியமிக்கப்பட்டு வந்தனர். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து, அரசாணையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
இந்த அப்பீல் மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களாக நியமிக்கப்படுகின்றனர். அதுபோல, அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு ஆஸ்பத்திரியில் நர்சிங் பணி வழங்க அரசு முடிவு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது என்று வாதம் செய்தார்.
மேலும், அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு, பொது தேர்வு நடத்தி அதில் தகுதியின் அடிப்படையிலேயே அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நர்சு வேலை வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே