ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். பிப்ரவரி 12 மற்றும் 13–ந்தேதி நடைபெறும் ஏலத்துக்கு முன்பு தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் பெயர் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.வீரர்களுக்காக மொத்தம் ரூ.60 கோடி செலவிட வேண்டும். 5 வீரர்களை தக்க வைத்தால் அதற்கு ரூ.39 கோடி கொடுக்க வேண்டும். மீதியுள்ள ரூ.21 கோடியில் தான் மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.
இந்த 5 வீரர்களில் முதல் வீரருக்கு ரூ.12½ கோடிக்கு தக்க வைத்து கொள்ளப் படுகிறார். 2–வது வீரருக்கு ரூ.9½ கோடியும், 3–வது வீரருக்கு ரூ.7½ கோடியும், 4–வது வீரருக்கு ரூ.5½ கோடியும், 5–வது வீரருக்கு 4 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரை தக்க வைத்துக்கொள்ள ரூ.4 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்த சஞ்சு சாம்சனை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. சர்வதேச போட்டியில் விளையாடாத அவருக்கு அந்த நிர்வாகம் ரூ.4 கோடி கொடுத்தாக வேண்டும்.
இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் இளம் வயது கோடீசுவரர் என்ற முத்திரையை அவர் பெறுகிறார். கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு 19 வயது 58 நாட்கள் தான் ஆகிறது. கடந்த ஆண்டு அவர் ரூ.10 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தம் ஆனார். தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.4 கோடி ஆகிறது.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் சஞ்சு சாம்சன் 11 ஆட்டத்தில் விளையாடி 206 ரன் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 115.73 ஆகும். மேலும் சாம்பியன்ஸ் ‘லீக்’ போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 47 பந்தில் 60 எடுத்தார். இந்த அதிரடியான ஆட்டம் மூலமே ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்து கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே