மீண்டும் ஆட்சி செய்த நீதிக்கட்சி:-
மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள், இந்திய அரசுச் சட்டம் 1919 இன் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டன. 1920 முதல் 37 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. இந்த 17 ஆண்டுகளில் 13 முறை (1926-30 தவிர) நீதிக்கட்சியே சென்னை மாகாணத்தை ஆண்டது.
1920 முதல் 1926 வரையிலான ஆட்சி:-
ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரசு 1920 தேர்தலைப் புறக்கணித்தது. பெரிய எதிர்ப்பின்றி 98 இடங்களில் போட்டியிட்ட நீதிக்கட்சி 63 இடங்களில் வென்றது. அக்கட்சியின் “ஏ. சுப்பராயுலு ரெட்டியார்” சென்னையின் “முதல் முதலமைச்சரானார்”. ஆனால் விரைவில் உடல்நிலைக் குறைவினால் அவர் பதவி விலகி பனகர் அரசர் முதல்வரானார். இரட்டை ஆட்சி முறை நீதிக்கட்சிக்கு முழுமையாக ஏற்புடையதாக இல்லை.
1924 இல் நீதிக்கட்சியின் நிலையினை விளக்கிய வெங்கட ரெட்டி நாயுடு :-
நான் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தா போது, வனத்துறை, வேளாண்மை என் கையில் இருந்தது ஆனால் நீர்ப்பாசனத்துறை என் கட்டுப்பாட்டில் இல்லை. சென்னை மாகாணத்தின் வேளாண்துறை அமைச்சராக நானிருந்தாலும் சென்னை விவசாயிகள் கடன் சட்டமோ, நிலவிருத்தி சட்டமோ என்னைக் கேட்டு இயற்றப்படவில்லை. நீர்ப்பாசனம், வேளாண் கடன்கள், நிலவிருத்தி கடன்கள், பஞ்ச நிவாரணம் ஆகிய எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு வேளாண்துறை அமைச்சர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை.இதுபோல் தொழிற்சாலைகள், கொதிகலன்கள், மின்சாரம், நீர் ஆற்றல், சுரங்கம், தொழிலாளர் துறைகள் எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத தொழிற்துறை அமைச்சராகவும் இருந்தேன் எனக் கூறினார்.
தியாகராய செட்டியின் அதிகாரப்போக்காலும் தமிழ் உறுப்பினர்களைக் கண்டுகொள்ளாமல் தெலுங்கு உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததாலும் நீதிக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1923 இல் சி. ஆர். ரெட்டி விலகி தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சுயாட்சிக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. 1923 இல் நடந்த இரண்டாவது தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றாலும் அதன் பெரும்பான்மை குறைந்து போனது. இரண்டாவது சட்டமன்றத்தின் முதல் நாளன்றே எதிர்க்கட்சிகள் பனகல் அரசர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. 65-44 என்ற வாக்கு கணக்கில் அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பனகல் அரசர் நவம்பர் 1926 வரை முதல்வராக நீடித்தார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி சுயாட்சிக் கட்சியிடம் தோல்வியடைந்தது. ஆனால் வெற்றி பெற்ற சுயாட்சி கட்சியினர் ஆட்சியமைக்க மறுத்து விட்டதால் ப. சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளைக் கொண்டு சென்னை ஆளுனர் ஒரு அரசினை உருவாக்கினார்.
நீதிக்கட்சியின் 1930 முதல் 1937 வரையிலான ஆட்சி:-
4 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக செயல்பட்ட நீதிக்கட்சி பின்னர் 1930 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முனுசாமி நாயுடு முதல்வரானார். பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் அப்போது உச்சத்தில் இருந்ததால் சென்னை மாகாணத்தின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. வருவாய் குறைபாட்டை ஈடுகட்ட அரசு நிலவரியை அதிகரித்தது. இதனாலும் பொபிலி அரசர் மற்றும் வெங்கடகிரி குமாரராஜா இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதாலும் நீதிக்கட்சியின் ஜமீன்தார் குழு அதிருப்தியடைந்தது. 1930 இல் பி. டி. ராஜன் மற்றும் முனுசாமி நாயுடு ஆகியோரிடையே கட்சி தலைவராவதில் போட்டியேற்பட்டது. நவம்பர் 1930 இல் எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமையில் ஜமீன்தார்கள் ”ஜிஞ்சர்” குழு என்ற போட்டிக்குழுவை உருவாக்கினர்.
அக்டோபர் 10-11, 1932 இல் நடைபெற்ற கட்சியின் 12வது வருடாந்திர மாநாட்டில் ஜமீன்தார் குழு நாயுடுவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கி பொபிலி அரசரை அவருக்கு பதில் தலைவராக்கியது. சொந்தக் கட்சியினரே தனக்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து விடுவார்கள் என்று அஞ்சிய நாயுடு நவம்பர் 1932 இல் பதவி விலகி, பொபிலி அரசர் முதல்வரானார். நாயுடுவின் ஆதரவாளர்கள் ஜனநாயக நீதிக்கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, 1935 இல் நாயுடுவின் இறப்புக்குக் பின்னர் மீண்டும் நீதிக்கட்சியில் இணைந்தனர். இக்காலகட்டத்தில் நீதிக்கட்சியின் எல். சிறீராமுலு நாயுடு சென்னை நகரின் மேயராகப் பணியாற்றினார்.
(தொடரும்…)
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே