பிரபுதேவாவின் ரவுடி ரத்தோர் இந்தி திரையுலகில் வசூலை வாரிக் குவிக்கிறது இதை சற்றும் எதிர்பாராத இந்தி பட உலகினர் விமர்சன கணைகளால் அவரை புரட்டி எடுக்கின்றனர். பொதுவாகவே இந்திப் திரைப்பட உலகில் தென்னிந்தியாவில் இருந்து வரும் எவரையும் மிக எளிதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அதுவும் இயக்குனர்களை ஒப்புக் கொள்வதில் அவர்களுக்கு அவ்வளவு கஷ்டம். தென்னிந்திய இயக்குனர்கள் இயக்கிய படங்கள் வெற்றிகரமாக ஓடினாலும் அது சரியில்லை இது சரியில்லை என்று விமர்சனம் என்ற பெயரில் காய்ச்சி எடுத்து விடுவார்கள்.
இதில் பெரிய அளவில் தப்பித்தது கஜினி இயக்குனர் முருகதாஸ் மட்டுமே, மணிரத்தினம் மற்றும் மலையாளத்தில் பிரபல இயக்குனரான ப்ரியதர்ஷன் கூட தப்பவில்லை. இந்தி திரையுலகில் மற்றும் இந்தி சேனல்களில் வகையாக மாட்டிக் கொண்டவர் நடன புயல் பிரபுதேவா. அவர் இயக்கிய இந்திப் படம் ரவுடி ரத்தோர் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது, இது அவருடைய இரண்டாவது இந்தி படம், எப்படி பொறுத்து கொள்வார்கள் அவர்கள்…தினமும் பிரபுதேவாவை கிண்டலடித்து ஒரு செய்தியாவது வெளிவருவது வழக்கமாகிவிட்டது
இது போன்ற அனாவசிய விமர்சனங்கள் நடன புயலை தினமும் சூடற்றிக் கொண்டிருகிறது. அவரே இப்பொழுது தான் நயன்தாரா பிரச்சனையில் வெளியே வந்திருக்கிறார். இந்த தேவையற்ற விமர்சனங்கள் குறித்து அவர் கூறுகையில், “படம் சூப்பர் ஹிட், மக்கள் பாராட்டுகின்றனர், வசூலிலும் சாதனை படைக்கிறது, ஒரு சிறந்த வெற்றிப் படத்துக்கு இதை தவிர வேறு என்ன வேண்டும். விமர்சனங்களுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். ஆனால் இதை நினைத்து நான் படங்கள் எடுக்கவில்லை. ரசிகர்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன். தென் இந்திய மொழிகளில் தயாரான படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் எடுப்பவை வியாபாரப் படங்களைத்தான். அதுவும் ரீமேக்தான். அதனால் என்ன… அதற்காக நான் பெருமைபடுகிறேன். ரவுடி ரத்தோர் படத்தை தெலுங்கில் இருந்து ரீமேக் செய்துள்ளேன். வாண்டட்டும் ரீமேக் படம்தான். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இனியும் இதைத் தொடர்வேன். விமர்சகர்களால் என் படம் ஓடுவதில்லை,” என்றார்.
அவர் பேசுவதில் இருந்து எந்த அளவிற்கு அவரை வாட்டி எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். கமலையும் ரஜினியையும் ஓரம் கட்டியவர்கள், பிரபுதேவா எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.அறிவுப்பு:- கார்த்தியின் சகுனி திரைப்பட பாடல்கள் MP3 Songs download…Click here…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே