தனுஷ்,சிம்பு இந்த பயலுக தொல்லை தாங்க முடியல


காணொளி:-

ரஜினி,கமலோ இல்லை விஜய், அஜீத்தோ அடித்து கொண்டால் அது வியாபார போட்டி என்று எடுத்து கொள்ளலாம், ஆனால் சிம்புவும் தனுஷும் அடித்துக் கொள்வதை பார்த்தால் ஒரே காமடி தான். இவர்களுக்கு மேலே இவர்கள் ரசிகர்கள்….எதுவும் சொல்வதற்கு இல்லை.

தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகர் நடித்த படத்தையோ அல்லது படத்தில் பேசிய வசனத்தையோ மற்ற நடிகர்கள் தங்கள் படத்தில் நகைச்சுவைக்காக கையாளுவது மிக சாதாரணமான ஒன்று. ஆனால் சிம்புவும், தனுஷும் மாறி மாறி தங்கள் படங்களில் அடுத்தவர்களை மொக்கையாக்குவதே தொழிலாக கொண்டுள்ளனர், இவர்கள் படங்களில் வசனகர்த்தாக்கள் பெரிய பாவம் செய்தவர்கள்…இவர்கள் சண்டையை வசனகர்த்தாக்கள் தங்கள் மண்டையை உடைத்துக் கொண்டு வளர்த்து விட வேண்டும். என்ன கொடுமை சரவணன்…

சிம்பு நடித்த காளை படத்தில் ’நான் பொல்லாதவன்’ என்று வில்லன் சொல்லும் போது ’நான் கெட்டவன்டா’ என்று சிம்பு சொல்லுவது போன்ற வசனம் இடம்பெற்றிருக்கும். சிம்பு நடித்து வெளியான வானம் படத்திலும் சந்தானமும் சிம்புவும் யாரிடம் கடன் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ’நம்ம தனுஷு…’ என்று சிம்பு சொல்ல, ‘அவன் உனக்கு செட் ஆகமாட்டான்…’ என்று சந்தானம் சொல்லுவார். சிம்புவும் தனுஷும் சமீபமாக சில பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொண்டபோது நன்றாக பேசி இருவரும் சேர்ந்து நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். ஆனால் தான் நடிக்கும் படங்களில் இதுபோன்ற வசனங்களை வைத்து தனுஷை வம்பிற்கு இழுப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் சிம்பு.

சிம்புவின் புதிய தத்துவம் தனுஷை டெரரர் ஆக்கியிருக்கும் சிம்பு சொன்னது இது தான் “நாம ஒருத்தர ஒருத்தர் திட்டி நடிச்சா தான் நாம கோடம்பாக்கத்தில் வளர முடியும்” எப்படி இருக்கு இந்த கொடுமை. சிம்பு நேரடியாக இவ்வாறு கூறியிருந்தாலும் தனுஷ் ஓரளவிற்கு பரவாயில்லை பன்ச் வசனங்களால் ரசிகர்களை மட்டும் தான் பதம் பார்ப்பார்.

சிம்பு, ஹன்ஸிகா மோத்வானி, சந்தானம், கணேஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ’வாலு’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது, இந்த டிரெய்லரில் ஹன்ஸிகா மோத்வானி சிம்புவை பார்த்து “சில பசங்கள பாக்க பாக்க தான் புடிக்கும். உன்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே புடிச்சிடும்” என்று சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் இடம்பெற்றுள்ள “ என்ன மாதிரி பசங்கள பாத்த உடனே புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும்” என்ற தனுஷின் வசனத்திற்கு சிம்பு கொடுக்கும் பதிலாம் இது.

இப்பவே கண்ண கட்டுது…வாலு படம் வெளியான பிறகு என்ன என்ன கொடுமை எல்லாம் இருக்கோ… அறிவுப்பு:- கார்த்தியின் சகுனி திரைப்பட பாடல்கள் MP3 Songs – To Download…Click here…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago