சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரால் உயிருக்கு ஆபத்து என்று முறையிட்டு காவல்துறையில் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
இதுபற்றி சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹிம் ராவுத்தர் மாநகர காவல் ஆணையர் திரிபாதியிடம் கொடுத்துள்ள மனுவில் ” ஃபெப்சி, சினிமா தயாரிப்பாளர்களிடையே நடந்த பிரச்னையில் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக எஸ்.ஏ.சந்திர சேகரன், தேனப்பன், கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாத காலத்திற்கு நீக்கியுள்ளோம்.
இந்நிலையில் இடைக்கால தலைவராக என்னை (இப்ராஹிம் ராவுத்தர்) உறுப்பினர்கள் நியமித்துள்ளனர். 3 பேரை நீக்கியதால், எங்கள் உறுப்பினர்களுக்கு அடியாட்கள் மூலம் ஆபத்து வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே எங்கள் உறுப்பினர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் தான் 3 பேரும் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான அதிகாரம் இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் “. இவ்வாறு இப்ராஹிம் ராவுத்தர் தனது மனுவில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
இந்த தயாரிபபாளர்கள்தான் தமது படங்களின் ஊடாக வன்முறை மற்றும் ஆபத்துகளை உருவாக்குகிறார்கள். இவர்கள் தங்கள் படக் கதாநாயகர்களை அனுப்பி எதிரிகளை அடித்து துவம்சம் செய்யட்டும். பொலிசார் கடைசில் வருவார்கள். இப்போது போய் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.-- நேசாஜி