மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 

வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீஸ்சில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மன்மதன் அப்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது.

 

நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளை புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு தீங்கிழைக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இந்த பாடலில் அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்து இடம்பெற்ற பாடலில் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

 

படத்திற்காக, நடிப்புக்காக, சும்மா கதைக்காக, பாடலின் வீரியத்திற்காக யாரும் விளக்கம் கோரலாம்.யாரும் எந்த மதஉணர்வையும், சிறுமைபடுத்தியும், இந்திய மக்கள் சட்டங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

 

எச்சரிக்கை: குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்.

 

விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, “மார்க்கெட்டிங்’ பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.

தான் நடித்த, “மன்மதன் அம்பு’ என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், “கவிதை’ இப்படி போகிறது:

 

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
….

 

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
….

 

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
….

 

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
….

 

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
….

 

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

 

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்

 

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
….

 

இதுதான் அந்தக், “கவிதை.’தமிழ் சினிமாவின் தரத்தை, “சர்வதேச லெவலுக்கு’ உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, “சர்வதேச லெவலையும்’ தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.

 

“எய்ட்ஸ்’ பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

View Comments

  • இந்த அபூர்வ வரிகளை கமல் அவருடைய மகள்களுக்கு frame போட்டு கொடுப்பது நலம். அவர்களுக்கு இந்த கருத்துக்கள் உபயோகமாக இருக்கும்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago