நடிகை மாளவிகா மீண்டும் குத்தாட்டத்துக்கு தயாராகி விட்டார். திருமணத்துக்கு முன்பு வரை தனது கிக்கான நடிப்பார் ரசிகர்கள் கிர்ர் ஆக்கிய மாளவிகா, திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலக ஆரம்பித்தார்.
திருமணத்துக்கு முன்னரே கமிட் ஆன படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், கர்ப்பமாக இருந்த நேரத்தில்கூட கைநீட்டி வாங்கிய சம்பளத்துக்காக குத்தாட்டம் போட்டு விட்டு சென்றார். பின்னர் கணவர் வீ்ட்டில் ஓய்வெடுத்து வந்த மாளவிகா, குழந்தை பிறந்த பின்னரும் குழந்தையை கவனிப்பதில் பிஸி ஆனார்.
இப்போது மீண்டும் அம்மணி குத்தாட்டம் போட தயாராகிவிட்டார். எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடிக்கும் பொறுத்திரு என்ற படத்தில்தான் மாளவிகா கவர்ச்சி குத்தாட்டம் போடப் போகிறார். எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம் பெற்ற நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்… பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிகா நடனமாடுகிறார்.
இதுபற்றி எம்.ஜி.ஆர். நம்பி கூறுகையில், “எனக்கு பொறுத்திரு படத்தில் பால்காரன் வேடம். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாகவே நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டுக்கு புதிதாக ட்யூன் போடாமல், எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்… பாடலையே ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளோம். மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம், என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே