'மாதவி' நயன்தாரா 'சீதாவாக'…

தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா ‘ராமாயணம்’ படத்தில் ராமராக நடிக்க இருக்கிறார். இது பக்தி கலந்த கமர்ஷியல் படமாக இருக்குமாம். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.

சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த ‘சிம்மா’ படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. மீண்டும் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தில் நயன்தாரா ஜோடி சேர்கிறார் என செய்திகள் பரவின. இதற்கு தெலுங்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதற்கு காரணம் பிரபு தேவாதான். இன்னொருவருடைய கணவருடன் ஊர் சுற்றும் நயன்தாராவை எப்படி ‘சீதா’வாக பார்ப்பது என்று எதிர்ப்புகள் தொடர்ந்தபடி இருந்தன.

அதனால் இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பார் எனவும் பேசப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாரா தான் சீதையாக நடிக்கப் போகிறாராம். நயன் சீதாவாக நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெலுங்கு திரைவட்டாரத்தில் சொல்லிக் கொள்கிறார்கள்.

தற்போது சேலை விளம்பரங்களில் பிசியாக இருந்து வருகிறார் நயன். அடுத்து ‘ராமாயணம்’தான். சில மாதங்கள் முன்பு ஆந்திராவில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் பிரபு தேவா நயன்தாராவிற்கு ‘பெஸ்ட் க்ளோசப் ஜோடி’ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago