‘பருத்தீவிரன்’, ‘நான் மகான் அல்ல’ ஆகிய படங்களின் வரிசையில் மூன்றாவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படம் ‘சிறுத்தை’. இதில் முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி பிக்பாக்கட் மற்றும் படித்த இளைஞன் என இரண்டு வேடத்திலும் வித்தியாசத்தை காட்டி அசத்தியிருக்கிறாராம்.
ஒரு சாதாரண இளைஞனுக்கு அசாதாரண கடமையை முடிக்க வேண்டிய சூழலின் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை எப்படி முடித்துக் காட்டுகிறான் என்பதே இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோ ரி. “பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான். அதன் வேகம் இணையில்லாதது. இப்படத்தின் நாயகனின் கதாபாத்திரமும் இதே குணம்கொண்டதுதான் அதனால்தான் இந்த பெயரை படத்தின் தலைப்பாக வைத்தேன்” என்று தலைப்பின் காரணத்தை கூறிய இயக்குநர் சிவா, நடிகர் பாலாவின் சகோதரர். பிரபல ஒளிப்பதிவாளரான இவர் தெலுங்கில் ‘செளர்யம்’, ‘சங்கம்’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார்.
கார்த்தியுடன் இரண்டாவதாக இணையும் தமன்னா, சந்தானம், கார்த்தியுடன் இணைந்து காமெடியெல்லாம் செய்திருக்கிறாராம். இந்த மூவரின் காமெடியும் கலைகட்டும் விதத்தில் அமைந்திருக்க அதே சமயம் படம் முழுக்க தொடரும் சஸ்பென்ஸ் திரைக்கதையின் விருவிருப்பை கூட்டுமாம்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் கார்த்தி, இப்படத்தின் சண்டைக்காட்சியில் 150 அடி உயரத்திலிருந்து குத்தித்து படப்பிடிப்புக்குழுவை திகைக்க வைத்தாராம். இதுபோல பல ரிஸ்க்குகளை இப்படத்திற்காக செய்திருக்கும் கார்த்தி ஒரே பாடலில் 9 கெட்டப்பில் தோன்றுகிறாராம்.
மாஸ் எமோஷனல் மற்றும் எண்டர்டெய்னர் படமாக உருவாகிவரும் ‘சிறுத்தை’ யின் எழுபது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே