நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வ அமைப்பாக அங்கீகாரம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரதமமந்திரி தெரிவு செய்யப்பட்டதுடன் அமைச்சரவையினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம்நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள்சபைக்கு அருகாமையிலுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடியுள்ள பிரதிநிதிகளுடன் பரீஸ், இலண்டன் மாநகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் தொலைக்காட்சி தொடர்பாடல் தொழிநுட்பத்தினூடான இணைந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உரமாகிப்போன உயிர்களுக்கு மௌனாஞ்சலி செலுத்துவதுடன் அமர்வுகள் ஆரம்பமாகியது.

ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் திரு.றாம்ஸி கிளார்க், மலேசிய பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பேராசிரியர். இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை மையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல்.பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது.

இவ் UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண அமைப்பு சிறீலங்காவில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அண்மையில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப அமர்வினைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட மாதிரி அரசியல் யாப்பினை அங்கீகரிப்பதற்கு முன்னான விவாதம் என்ற சவால்மிக்க செயற்பாடு ஆரம்பமாகியது. இவ்விவாதத்தினைத் தொடர்ந்து மரபுசார்ந்த பாராளுமன்றக் கட்டமைப்பு இவ்அரசுக்கு உகந்ததெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவராக பிரதமமந்திரி செயற்படுவார் எனவும் பாராளுமன்றம் தீர்மானித்தது. அவருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகளும் வேறு ஏழு அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும். இது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட பாராளுமன்றத்தினையும், செனற் எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். அவசியமான வேளைகளில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களினை மீள் அழைப்பதற்கான பொறிமுறையினை பாராளுமன்றம் கோவைப்படுத்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த திரு.பொன் பால்றாஜன் அவர்களினை பாராளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த செல்வி. சுகன்யா புத்திரசிகாமணி அவர்களை பிரதி சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவு செய்தது.

திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

View Comments

  • I always motivated by you, your views and way of thinking, again, appreciate for this nice post.

    - Joe

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago