Categories: அரசியல்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர நிபந்தனையா?

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற வேண்டும் எனில், அதற்கு முன்னதாக காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை, அமெரிக்கா மறுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் கிரவ்லி கூறியதாவது:ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர இடம் பெற வேண்டுமெனில், அதற்கு முன்னதாக அந்நாடு காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த இரண்டு விவகாரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக பேசித் தீர்க்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா., அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென இந்தியாவும், அமெரிக்காவும், மற்ற பல நாடுகளும் விரும்புகின்றன. இது தொடர்பாக நாடுகள் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பது தொடர்பான பிரச்னை, இந்திய அரசுடன் தற்போது அமெரிக்க அரசு நடத்தி வரும் பேச்சு வார்த்தையிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுமா என, நான் சொல்ல முடியாது. இவ்வாறு கிரவ்லி கூறினார்.

முன்னதாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நிருபர்களிடம் பேசுகையில், ""இந்தியாவை பொறுத்தமட்டில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் விவகாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் சாதகமான முடிவு வரும் என நம்புகிறோம்,” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago