எந்திரன் ஒரு அறிவியல் படம் என்ற போதிலும் அதனை பார்ப்பதற்கு அறிவியலினை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என “எந்திரன்” படத்தின் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் விளக்கியுள்ளார். அறிவியலைப் பற்றி கவலைப்படாமல் படத்தினை முழுவதும் ரசிக்கும்படியும் ஷங்கர் கூறியுள்ளார்.
அறிவியலாளர்களுக்கு “எந்திரன்” மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள ஷங்கர், இந்திய அளவில், ஏன்? உலக அளவில் கூட எந்திரன் போன்று ஒரு படம் இதுவரை வெளிவந்ததில்லை என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
“எந்திரன்” படத்தில் தற்போது Danny Denzongpa நடித்துள்ள வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, முதலில் தான் அமிதாப்பச்சனை தான் அணுகியதாக ஷங்கர் அதிர்ச்சியூட்டும் தகவலை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். ரஜினி, ரஹ்மான், ஷங்கர், ஐஸ்வர்யா என ஏற்கனவே இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் இணைந்துள்ள எந்திரனில் “அமிதாப்பும்” நடித்திருந்தால்…? படம் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும்.
ஆனால் அமிதாப் வில்லனாக நடிக்க விரும்பவில்லை. அமிதாப் வில்லனாக நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின. எனவே தான் வில்லனாக நடித்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நோக்கில், அமிதாப்பச்சன் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே