Atharvaa

செய்திகள், திரையுலகம்

படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடினார் நடிகர் அதர்வா!…

சென்னை:-‘பாணா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமானவர் அதர்வா.இவர் நடிகர் முரளியின் மகன் ஆவார்.அதர்வா ‘இரும்பு குதிரை’, ‘ஈட்டி’, ‘கணிதன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் ‘ஈட்டி’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். ஈட்டி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஓட்டப் பந்தய விளையாட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் அதர்வா ஓட்டப்பந்தய வீரராக வருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி அரசு இயக்குகிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

நார்வே திரைப்பட விழாவில் பாலாவின் ‘பரதேசி’ படத்திற்கு 4 விருதுகள்!…

சென்னை:-பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘பரதேசி’. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் இந்திய அளவில் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது. நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் இந்த படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என விருதுகளை அள்ளிச் சென்றது. ‘விடியும் முன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பூஜாவுக்கு கிடைத்துள்ளது.

செய்திகள், திரையுலகம்

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் ‘பரதேசி’ படத்திற்கு 4 விருதுகள்!…

சென்னை:-பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளியான படம் ‘பரதேசி‘. இப்படத்தை பி ஸ்டுடியோஸ் மூலம் பாலவே தயாரித்தார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். செழியன் ஒளிப்பதிவு செய்தார். இப்படம் ஏற்கனவே சிறந்த ஆடைவடிவமைப்பிற்காக தேசிய விருது பெற்றது. தற்போது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் வென்றிருக்கிறது. சிறந்த திரைப்படம் (பரதேசி), சிறந்த இயக்குநர் (பாலா), சிறந்த நடிகர் (அதர்வா), சிறந்த ஒளிப்பதிவு (செழியன்)ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது ‘பரதேசி’ திரைப்படம்.

Scroll to Top