பூலோகம்

செய்திகள், திரையுலகம்

‘கத்தி’ படத்தை ஓரங்கட்டுகிறதா திரையரங்குகள்!…

சென்னை:-‘கத்தி’ படம் உலகம் முழுவது 1500 திரையரங்குகளுக்கு மேல் வரவிருக்கிறது. ஆனால், இப்படத்தை வெளியிட்டால் தங்கள் திரையரங்கிற்கு ஏதும் பிரச்சனை வருமா?… என்று எண்ணி சில தியேட்டர்கள் தற்போது பின் வாங்குகின்றன.மேலும் இந்த சூழலைப் பயன்படுத்தி பூலோகம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கத்தி படத்தை வரும் 22ம் தேதி வெளியாக விடமாட்டோம் என வேல்முருகன் தலைமையிலான தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அழைத்து நேரடியாகவும் கூறிவிட்டனர்.இதனால் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் நாளை நடக்கும் கூட்டத்தில் தங்களின் நிலைப்பாட்டினைக் கூறுவதாக வேல் முருகனிடம் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர். நாளைய கூட்டத்திலும் கத்திக்கு எதிரான நிலை தொடர்ந்தால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனது பூலோகம் படத்தை திடீரென வெளியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய் வரலேன்னா, ஜெயம் ரவி வருவாராம்!… கோடம்பாக்கத்தில் பரவும் வதந்தி…

சென்னை:-விஜய்யின் கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று அந்த பட நிறுவனத்திடமிருந்தே உறுதியான தகவல்கள் வெளியான பிறகும்கூட, ஒருவேளை வராமலும போகலாம் என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சமீபத்தில் சென்சாருக்கும் படத்தை அனுப்பி யு சான்றிதழும் வாங்கி விட்டனர். ஆனபோதும், இன்னமும் படப்பிடிபபு நடப்பதாகவும், பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கத்தி வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கத்தி ஆடியோ விழாவுக்கு பிறகு அமைதி காத்து வந்த கத்திக்கு எதிரான தமிழ் அமைப்புகள் தற்போது மீண்டும் விழித்துள்ளன. படத்தை வெளியிடக்கூடாது என்று தியேட்டர்காரர்களிடம் முறையிடுவோம். அதையும் மீறி வெளியிட்டால் தியேட்டர்களுக்கு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், தீபாவளிக்கு கத்தி, பூஜை படங்கள் வருவதால் இந்த நேரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகத்தை இறக்கி விட வேண்டாம் என்று பின்வாங்கியிருந்த ஆஸ்கர் பிலிம்ஸ் தற்போது, ஒருவேளை கத்தி வரவில்லை என்றால், பூலோகத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறதாம். இந்த படம் ரிலீசுக்கு ரெடியாகி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், திரையுலகம்

‘ஐ’ படம் வெளியீடு தாமதம் ஏன்?…

சென்னை:-இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஐ’. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். தற்போது, படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை, நவம்பர் மாதம் எப்படியும் வந்துவிடும் என்கிறார்கள். ஆனால், அதுவும் உறுதியான தகவலா என்றும் தெரியவில்லை. தற்போது படத்தின் தெலுங்கு, ஹிந்தி டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே, படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏன் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்திற்கும், வினியோகஸ்தர்களுக்கும் முந்தைய படங்களின் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்சனைகள் இருக்கிறதாம். அவற்றை ஐ படத்தில் தீர்த்துக் கொண்டால்தான் முடியும் என வினியோகஸ்தர்கள் எதிர்பார்க்கிறார்களாம். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே அவர்கள் தயாரிக்கும் படங்களை மிகவும் காலதாமதத்துடனேயே ரிலீஸ் செய்கிறார்கள். வல்லினம், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்கள் முடிந்த பிறகும் அவற்றை மிகவும் தாமதமாகவே ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் தயாரித்துள்ள மற்றொரு படமான ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள பூலோகம் படம் முடிந்து பல மாதங்களாகியும் எப்போது வெளிவரும் என்பதும் தெரியவில்லை. கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் 2 படத்தையும் அதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. தயாரிப்பாளருக்கும் கமல்ஹாசனுக்கும் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வருகிறது. இப்போது ஐ படம் எப்போது வரும் என்பது சரியாகத் தெரியவில்லை.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு முன்பே விருந்து!…

சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. தீபாவளி ரேஸில் கத்தியுடன், விஷாலின் பூஜை மற்றும் ஜெயம் ரவியின் பூலோகம் படம் வெளியாக இருந்தது. மூன்று படங்களும் ஒரே நாள் திரைக்கு வந்தால், கலெக்ஷன் மூன்றாக பிரியும். தியேட்டர்களும் முறையாக அமையாது என்பதால் அனைத்து விநியோகஸ்தர்களும் சேர்ந்து பேசி ஒரு முடிவு எடுத்துள்ளனராம். தமிழ்நாடு திரையரங்கத்தை பொறுத்த மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் விஜய் படத்திற்கான வியாபாரம் இருக்கிறது. எனவே, தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கத்தியை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி 17ம் தேதி விஜய்யின் கத்தி படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் ஜெயம் ரவி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய் தான். இவர் நடிக்கும் படங்கள் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு மினிமம் கேரண்டி என்பார்கள். இவரின் ரசிகர் பலம் அறிந்த அடுத்த கட்ட நடிகர்கள் தங்கள் படங்களை, விஜய்க்கு போட்டியாக ரிலிஸ் செய்ய தயங்குவார்கள். ஆனால் வரும் தீபாவளி அன்று கத்தி படத்துடன், ஜெயம் ரவி நடித்த பூலோகம் படமும் வெளிவருகிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூலோகம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான், இவர் தயாரித்த ‘ஐ’ படம் நவம்பர் மாதம் தள்ளி போவதால் திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட பூலோகம்!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவியின் நடிப்பில் தயாரான படம் பூலோகம். இந்தப் படத்தின் பர்ஸ்ட்காப்பி தயாராகி ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் பூலோகம் படத்துக்கு இன்னும் விமோசனம் பிறக்கவில்லை.நீண்ட மாதங்களாக ரிலீஸுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது பூலோகம் படம். பூலோகம் படத்தை ரிலீஸ் பண்ணும்படி சொல்லி அப்படத்தின் தயாரிப்பாளரிடம் கண்ணீர் மல்காத குறையாக கேட்டுவிட்டார் இயக்குநர். ஆனால் தயாரிப்பாளர் மனம் இரங்கவில்லை. பிறகு ஜெயம் ரவியே நேரடியாய் சென்று தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியை சந்தித்து பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய கேட்க சென்றார். அவரை சந்திக்க மறுத்துவிட்டார் ஆஸ்கார் ரவி. இந்நிலையில் தீபாவளி அன்று பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக தன்னுடைய விநியோகஸ்தர்களிடம் கூறி இருக்கிறார். கத்தி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் சேர்ந்து ஏறக்குறைய 800 தியேட்டர்களை புக் பண்ணிவிட்டதால், பூலோகம் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது என்று விநியோகஸ்தர்கள் சொல்ல, பூலோகம் படத்தை மீண்டும் தள்ளி வைத்துவிட்டார் ஆஸ்கார் ரவி.

Scroll to Top