ஜெயம்_ரவி

செய்திகள், திரையுலகம்

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்திராஜன். தற்போது சக்திராஜன், ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். லட்சுமிமேனன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘கொம்பன்’. இப்படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். பிளஸ் 2 பரீட்சை எழுதிக் கொண்டிருந்ததால் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். தற்போது பிளஸ் 2 பரீட்சை எழுதி முடித்துவிட்டதால் படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் அஜித்தை மறந்து போன பிரபல நடிகை!…

சென்னை:-‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் பலர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். இதில் ஹீரோ, இயக்குனரை தாண்டி நம்மை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சதா தான். ‘போய்யா போ’ என்ற ஒரே வசனத்தில் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டவர். இதை அடுத்து அந்நியன், எதிரி, திருப்பதி என பெரிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், யார் கண் பட்டதோ இதன் பின் அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியில் முடிய நீண்ட இடைவேளைக்கு பிறகு, வடிவேலு நடிப்பில் எலி படத்தின் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் இவர் அளித்த பேட்டியில் விக்ரம், மாதவன், ஜெயம் ரவி ஆகியோரின் பெயரை குறிப்பிட்ட இவர், அஜித் பெயரை குறிப்பிடவே இல்லை.

செய்திகள், திரையுலகம்

பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…

சென்னை:-நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் இமானை ஒரு பாடலுக்கு பாட வைத்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘குத்து சாங் மா நீ… ஹிட்டு சாங் மா நீ…’ என தொடங்கும் குத்துப்பாடலை பாட வைத்தார். தற்போது ஜெயம் ரவியையும் பாடகராக அறிமுகம் செய்துள்ளார். ஜெயம் ரவி இப்படத்தில் ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான் பல்பு வாங்கிட்டேன்…’ எனத்தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை தேவா மற்றும் விவேக்குடன் இணைந்து பாடியுள்ளார் ஜெயம் ரவி.

செய்திகள், திரையுலகம்

‘பூலோகம்’ திரைப்படம் வெளிவருவதில் மேலும் சிக்கல்!…

சென்னை:-ஜெயம் ரவி-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பூலோகம்’. ஆஸ்கார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பணிகள் முடிவடைந்து ரீலீசுக்கு தயாராக இருக்கிறது. கடந்த வருடமே வெளிவரும் என்று எதிர்பார்த்த இந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கு மேலும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது, இந்த படத்தை தயாரிப்பதற்காக ஆஸ்கார் நிறுவனம் ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.40 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், படம் இன்னும் வெளிவராத நிலையில், ரூ.40 கோடியை செலுத்தாமல் பூலோகம் படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். முழுத் தொகையையும் செலுத்திய பிறகே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நேற்று கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஏப்ரல் 16-ந் தேதி வரை பூலோகம் படத்தை வெளியிட தடை விதித்தும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

செய்திகள், திரையுலகம்

டாப் தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் – ஒரு பார்வை!…

தமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் விஜய், அஜித். இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி என வசூலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களின் வசூலின் நிலைமை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. சமீபத்தில் முன்னணி இணையத்தளம் ஒன்று இவர்களின் சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளது. டாப் நடிகர்களின் சம்பள பட்டியல்கள்:- ரஜினிகாந்த்- ரூ 40 கோடி கமல்ஹாசன்- ரூ 25 கோடி அஜித்- ரூ 25 கோடி விஜய்- ரூ 20 கோடி சூர்யா- ரூ 20 கோடி விக்ரம்- ரூ 12 கோடி தனுஷ்- ரூ 10 கோடி சிவகார்த்திகேயன்- ரூ 7 கோடி கார்த்தி- ரூ 6 கோடி விஷால்- ரூ 5 கோடி சிலம்பரசன்- ரூ 4 கோடி ஆர்யா- ரூ 3 கோடி ஜெயம் ரவி- ரூ 3 கோடி ஜீவா- ரூ 2.5 கோடி சித்தார்த்- ரூ 2.5 கோடி விஜய் சேதுபதி- ரூ 2 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அவர்கள் கொடுத்த ஹிட் படங்களை பொறுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் ஜெயம் ரவி படத்தை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு!…

சென்னை:-நடிகர் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டண்டனக்கா’ என துவங்கும் பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவதுபோல் இந்த பாடல் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘டண்டனக்கா’ என்பது டி.ராஜேந்தர் படங்களில் சொல்லும் பிரபலமான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வீடியோ இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இதனை பாடி உள்ளார். ‘டண்டனக்கா’ பாடலில் டி.ராஜேந்தரை இழிவுபடுத்தவில்லை என்று ஜெயம்ரவி மறுத்தார். அவர் கூறும்போது, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் டி.ராஜேந்தர் ரசிகனாக நான் வருகிறேன். அவரின் தன்னம்பிக்கையே எனது கேரக்டராக இருக்கும். எனவேதான் ‘டண்டனக்கா’ பாடலை படத்தில் இடம்பெற வைத்தேன். அதில் டி.ராஜேந்தரை அவமதிக்கும் வரிகள் இல்லை. அவரை பெருமைபடுத்துவதாகவே இருக்கும் என்றார். இந்நிலையில் ‘டண்டனக்கா’ பாடலை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ‘ரோமியோ ஜுலியட்’ தயாரிப்பாளர் நந்தகோபால், டைரக்டர் லஷ்மண், இமான், அனிருத் ஆகியோருக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாகப்பட்டினத்தில் ‘ஒரு தலை காதல்’ படப்பிடிப்பில் இருந்த டி.ராஜேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘டண்டனக்கா பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி எனது வக்கீலிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றார். இசையமைப்பாளர் இமான் கூறும்போது, டி.ராஜேந்தரை பெருமைப்படுத்துவது போல்தான் இந்த பாடலை உருவாக்கி உள்ளோம். அவரை இழிவுபடுத்தவில்லை. அவரிடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளது என்றார். தயாரிப்பாளர் நந்தகோபால் கூறும்போது, டண்டனக்கா பாடலில் டி.ராஜேந்தரை கொச்சைப்படுத்தவில்லை. படத்தை பார்க்க அவர் விரும்பினால் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பாக அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம் என்றார்.

செய்திகள், திரையுலகம்

நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!…

சென்னை:-ஜெயம் ரவி–ஹன்சிகா ஜோடி ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நடந்தது. இதில் ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் மேடையில் படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்தனர். அப்போது ஜெயம் ரவி, ஹன்சிகா இந்த படத்தில் உண்மையாகவே நடித்திருக்கிறார் என கிண்டலாக கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

செய்திகள், திரையுலகம்

‘புலி’ என் வாழ்க்கையின் முக்கியமான படம் – ஹன்சிகா!…

சென்னை:-பிரபல நடிகை ஹன்சிகா தற்போது விஜய் நடிக்கும் புலி, உதயநிதியின் இதயம் முரளி, சிம்புவின் வேட்டை மன்னன், ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் என பல படங்களை கையில் வைத்து உள்ளார். ஆனால் புலி படம் தனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்கிறாராம். மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் நடிப்புக்கு தீனி போடும் வகையில் ராஜா காலத்து இளவரசி வேடம் என்பதில் ஏக குஷியில் உள்ளார். என்னிடம் பல படங்கள் கையில் இருந்தாலும் என் மார்க்கெட்டை நிலை நிறுத்த போகும் புலி தான் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் ஹன்சிகா.

செய்திகள், திரையுலகம்

ஜெயம் ரவி-ஹன்சிகாவின் காதல் கொண்டாட்டம்!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி என்று சிலர் இருப்பார்கள். அந்த வகையில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட ஜெயம் ரவி–ஷன்சிகா ஜோடி மீண்டும் ரோமியோ ஜுலியட் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதையெல்லாம் விட இப்படத்தில் டி.இமான் இசையில் அனிருத் பாடிய ’டண்டனக்க’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. படம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையில் தமிழக இளைஞர்களுக்கு இந்த ரோமியோ ஜுலியட் செம்ம விருந்து தான்.

செய்திகள், திரையுலகம்

நடிகை திரிஷாவுக்கு வந்த பயம்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் நடிகை சோனம் கபூரையும் பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இதனால் பன்றிக் காய்ச்சல் குறித்த பீதி நடிகர்களிடமும் உள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிஷாவுடன் ஜெயம் ரவி, இயக்குனர் சுராஜ் ஆகியோர் மாஸ்க் அணிந்தபடி இருக்கின்றனர். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர். திரிஷா மாஸ்க் போட்டிருந்ததை பார்த்துவிட்டு அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏதாவது வந்துவிட்டதோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் திரிஷா முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Scroll to Top