சென்னை

செய்திகள், திரையுலகம்

‘உத்தம வில்லன்’ படம் பார்த்து நடிகை குஷ்பு கூறிய விமர்சனம்!…

சென்னை:-உலக நாயகனை காண நாளை உலக தமிழர்களே ரெடியாகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் கமல்ஹாசனுடன் அமர்ந்து நடிகை குஷ்பு பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்து விட்டு தன் டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷமாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதில், நேற்று மாலை உத்தம வில்லன் படம் பார்த்தேன், மிகவும் அருமையான வசனம், ஒளிப்பதிவு, உத்தம வில்லன் குறித்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால், இது போல் தமிழில் இதற்கு முன் எந்த படமும் வந்தது இல்லை. கமலின் கண்களே ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது, அவர் என்றும் மாஸ்டர் தான் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக டுவிட் செய்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? – கருத்து கணிப்பு முடிவுகள்…

சென்னை:-இந்திய சினிமாவில் தற்போது தென்னிந்தியா சினிமா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தென்னிந்தியாவில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பாலிவுட்டில் டப் செய்யபடுகிறது. பல தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட் படங்களை இயக்குகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் இணையத்தளம் ஒன்று தென்னிந்திய நடிகர்களை குறி வைத்து கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. அந்த இணையத்தளம் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது. இதில் விஜய், அஜித், பவன் கல்யாண், ரவிதேஜா, மம்முட்டி, மோகன் லால், ரஜினி, கமல் என பலரும் இருக்க, தற்போது வரை முதலிடத்திற்கு விஜய், அஜித் இருவருக்குமிடையே தான் கடும் போட்டி. இந்த கருத்து கணிப்பின் முடிவு வெளியிடபட்டு உள்ளது. இதில் அஜித் 51.27 சதவீத ஓட்டுகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். நடிகர் விஜய் 39.69 சதவீத ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். மீதி உள்ள 9 சதவீதத்தை தான் பவன் கல்யாண், மகேஷ்பாபு, ரஜினிகாந்த் , மம்முட்டி, புனித் ராஜ்குமார், கமல்ஹாசன், மோகன்லால், ரவி தேஜா ஆகியோர் பெற்று உள்ளனர்.

செய்திகள், திரையுலகம்

தமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்!…

சென்னை:-நடிகர் கமலின் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் நாளை (1–ந் தேதி) ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார். உத்தமவில்லன் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து கடவுளை விமர்சித்து பாடல் இடம் பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. படத்துக்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எதிர்ப்புகளை மீறி தற்போது உத்தமவில்லன் ரிலீசாகிறது.

செய்திகள், திரையுலகம்

‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்!…

சென்னை:-‘புலி’ திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் ‘இளையதளபதி’ நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். தற்போது மேலும் அட்டக்கத்தி படத்தின் மூலம் நம்மை கவர்ந்த நடிகை நந்திதாவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இவர் ஒரு பாடலுக்கு நடனமாடவிருப்பதாக கூறப்படுகிறது. இனி என்னை நந்திதா ஸ்வேதா என்று அழையுங்கள் என தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் அஜித் ரசிகர்களை பாராட்டிய காவல் துறையினர்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தே. நாளை இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பகுதியில் அனைவரும் தலை கவசம் அணிந்து பைக் ஓட்டவுள்ளனர். இந்த விழிப்புணர்வு நற்செயலுக்காக காவல் துறையிடம் அனுமதி வாங்க காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் விருப்பத்தை கூறியுள்ளனர். அவர்களும் நல்ல விஷயத்திற்காக தானே செய்கிறீர்கள், தாரளமாக செய்யுங்கள் என அனுமதி வழங்கியுள்ளனர்.

செய்திகள், திரையுலகம்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘காஞ்சனா-2’ ரசிகர்கள் மத்தியிலும், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸை பாராட்டினார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது, ரஜினியை சந்தித்து பாராட்டுக்களை பெற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ், ரஜினியை வைத்து ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தாராம். அவரது விருப்பத்துக்கு ரஜினியும் ஒப்புதல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறாராம். இப்படத்தை முடித்துவிட்டு ராகவா லாரன்ஸ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

‘உத்தமவில்லன்’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இதில், பூஜாகுமார், ஆண்ட்ரியா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதற்காக தியேட்டர்களில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே படத்தின் மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால், இப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு சிம்பு கொடுக்கும் பரிசு!…

சென்னை:-நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வாலு’. நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தை மே 9-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, அஜித்துடைய பிறந்தநாளில்தான் தன்னுடைய படத்தை வெளியிட திட்டமிட்டார். ஆனால், ‘உத்தமவில்லன்’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்கள் அன்றைய தேதியில் வெளிவருவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இருந்தாலும் தன்னுடைய தலைவரின் பிறந்தநாளுக்கு ஏதாவது ஒன்றை புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்த சிம்பு, தற்போது அஜித் பிறந்தநாளில் ‘வாலு’ படத்தின் மற்றொரு டிரைலரை வெளியிடவிருக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

நடிகை டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம்!…

சென்னை:-ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காஞ்சனா-2. இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் Leaving releationship எனக்கு தவறாக தெரியவில்லை. இது அவர்களுடைய விருப்பம், திருமணம் நடந்து பிடிக்காத போது விவாகரத்து வரை செல்வதற்கு, இதுவே மேல் என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் புலி. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க பாடலும் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. புலி படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் ஆந்திர வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. வரலாற்று படம் என்பதால் அங்கு பல லட்சம் செலவில் அந்தக் காலத்திற்கேற்றார் போல் ஒரு காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக தான் அமைக்கப்பட்டுள்ளதாம். படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதால் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். எப்படியோ ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பமாகி விட்டது.

Scroll to Top