திரைப்படப்பாடல்,பாடல்கள் ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023) post thumbnail image
  • Song : Onnoda Nadandhaa
  • Movie/Album Name : Viduthalai Part 1 (2023)
  • Star Cast : Soori , Vijay Sethupathi and Bhavani Sre
  • Singer : Ilayaraja and Ananya bhat
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Suga

ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!

பெண் : நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!

ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!

பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே

ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!

பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது

ஆண் : முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே

ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்

பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ

பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே

ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது

ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்

பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே

ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி