அரசியல்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ?

செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ?

செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ? post thumbnail image

சென்னை: செயலலிதாவின் தோழி சசிகலா அவர்கள் தற்சமயம் பெங்களூரு சிறையில் இருக்கின்றார். அவர் மீது ரூ.1,600 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், அதை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாகவும் செய்திகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றன. சசிகலாவின் வக்கீல் செந்தூரபாண்டி இந்த தகவலை முற்றுமுழுதாக மறுத்துள்ளார். பணமதிப்பு நடைமுறைக்கு வந்த சமயத்தில் சசிகலா இந்த சொத்துக்களை குவித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது ரூ.1600 கோடிக்கு அந்த சமயத்தில் சசிகலா சொத்துக்களை வாங்கினாராம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் 7 நிறுவனங்களை வாங்கி, அதனை அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயரிலேயே செயல்படவும் அனுமதி தந்திருந்தார் அதை தான் சசிகலா அவர்கள் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ரூ.1600 கோடிக்கு பலர் பெயர்களில் சொத்துக்களை சசிகலா வாங்கியிருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைக்கவும்தான், 2017, நவம்பரில் சசிகலா குடும்பத்தினரல் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. செயா டிவி, மிடாசு மதுபான ஆலை என ஒரு இடத்தையும் விடவில்லை.

சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வருமான வரித்துறையினர் வசம் ஏராளமான ஆவணங்கள், நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் காட்டாத பணம், ஆவணங்களை அதிகாரிகள் மூட்டை மூட்டையாக கட்டி எடுத்தும் சென்றனர். அந்த ஆவணங்கள் எல்லாமே ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டன. இதற்கு பிறகுதான் அதிகாரிகள் சசிகலா குடும்பத்தில் அனைவரையும் விசாரித்தனர். சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடமும் இந்த விசாரணை நடந்தது .

இரண்டு வருட தீவிர விசாரணைக்கு பிறகு, 60 போலி நிறுவனங்களை சசிகலா குடும்பத்தினர் நடத்தி வருவதும், அந்த போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1600 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ.1600 கோடி இதற்கு பிறகு பினாமி பெயரில் நடந்து வந்த பல போலி நிறுவனங்கள் முடக்கம் செய்து, அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்தனர். அதன்படி இப்போதைக்கு 9 நிறுவனங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் ரூ.1,600 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்களை அனைத்தும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் முற்று முழுதாக மறுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி