காசுமீருக்கு எப்படி சிறப்பு அந்தஸ்து வந்தது ? 370, 35A ஆகிய அரசியலமைப்பு சாசன சட்டங்கள் காசுமீரை எப்படி காக்கின்றன?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சம்மு காசுமீரை ஆண்ட, மகாராஜா ஹரிசிங், மக்களின் நலன் கருதி சம்மு – காசுமீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க 1949ம் ஆண்டு சம்மதித்தார். இதனையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. அந்த சமயம், காசுமீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டதால் இன்று வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காசுமீர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் சம்மு – காசுமீருக்கு தனிக் கொடி, அரசியல் சாசனங்கள் என சுயாட்சி கொண்ட மாநிலமாக இருந்தது. பின்னர் இந்திய நாட்டுடன் இணைந்ததை அடுத்து, மற்ற மாநிலங்களை போன்று இல்லாமல், மகாராஜா ஹரிசிங் விதித்த நிபந்தனைகள் படி சில சிறப்பு அந்தஸ்துகள் அம்மாநிலத்துக்கு மட்டும் வழங்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவில் உள்ள 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் சம்மு காசுமீருக்காக உருவாக்கப்பட்டது.

370 அரசியல் சாசனம் சட்டம் என்ன சொல்கிறது?

வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் ராணுவம் ஆகிய துறைகளை தவிர பிற துறைசார்ந்த நடவடிக்கைகள் மீது மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை சம்மு காசுமீர் சட்டப்பேரவையின் சம்மதத்துடன் இயற்றாவிடில் அது இம்மாநிலத்திற்கு பொருந்தாது. மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், காசுமீரில் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், மற்ற மாநிலங்களில் காசுமீர் மக்கள் சொத்துகளை வாங்கலாம். வெளிமாநில ஆண்களை காசுமீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அவர்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், வெளிமாநில பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் காசுமீரைச் சேர்ந்த ஆண்களுக்கு இது பொருந்தாது. மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி.

1954ம் ஆண்டு காசுமீர் மாநில அரசின் ஒப்புதலுடன், இந்திய குடியரசுத் தலைவரின் ஆணைப்படி இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 இணைப்பு (1)ல் அரசியலமைப்பு சட்டம் 35ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.

35A என்ன சொல்கிறது?

35ஏ பிரிவின் மூலம், சம்மு காசுமீரில் அந்த மாநில மக்களால் மட்டுமே அசையா சொத்துகளை வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் எந்த நில உரிமையும் கிடையாது. 10 ஆண்டுகள் சம்மு காசுமீர் மாநிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சொத்து வாங்கும் உரிமை உண்டு. வெளி மாநிலத்தவர்களால் காசுமீரில் அரசு வேலை, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற முடியாது.

சம்மு காசுமீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கு அளிக்கவேண்டிய உரிமையை தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது. சமத்துவ, சம உரிமை பாதிக்காத வகையில் காசுமீர் மாநில அரசு அதன் சட்டப்பேரவையில் எந்த சட்டத்தையும் இயற்றிக்கொள்ளலாம் என்ற அதிகாரத்தை தருகிறது சட்டம் 35A.

பாரதீய சனதா தனக்கிருக்கும் அதிக பெரும்பான்மையினை வைத்து இந்த சிறப்பு சட்டத்தைதான் தற்போது நீக்கியுள்ளது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

தமிழ்செல்வன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago