நாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்

விளம்பரங்கள்

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர் ஷங்கர் அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கையை தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்திருந்தார். இதை அதிமுக மற்றும் பாரதீய சனதா கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேலையில் இயக்குனர் ஷங்கர் இது போல் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவுக்கு திரை உலகத்தினர் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இன்று இயக்குநர்கள் சங்க தேர்தல் நடைபெற்ற போது சூர்யாவுக்கு பலரும் ஆதரவாக அவரது கருத்து ஆதரித்து பாராட்டினார். அதே வேளையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், புதிய கல்வி கொள்கை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். இதற்கு பதிலளித்த சீமான், திரைப்படங்களில் அதிரடி வசனம் பேசுவோர் இப்போதுதான் பேச வேண்டும். ஷங்கரின் கருத்து ஒரு இயக்குநருக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு அவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: