திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?…. post thumbnail image

நடிகர் விஷாலுக்கு இன்று(மார்ச்-16) நிச்சயதார்த்தம்!

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இதனை தெரிவித்துஇருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இவர்களது நிச்சயதார்த்தம் இன்று (16-ந்தேதி) ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.

விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லிசூப்லு, அர்ஜூன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார்.தற்போது கட்டிட பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று முடிவு செய்கிறார்கள்.

விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் , தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.2004-ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்றார் .ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடியானது.தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி