எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

விளம்பரங்கள்

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ள நிலையில் , அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் ,சாலிகிராமம் சென்று கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் சந்தித்து பேசினார். இரு சந்திப்புகளும் மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் என்கிற முறையில் விஜய காந்தை சந்திக்க வந்தேன். அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்த போது தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன்.அவர் உடல் நலத்துடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் கூட்டணியின் வெற்றியாக அமையும். த.மா.கா. வின் தேர்தல் அறிக்கை வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: