அரசியல்,பரபரப்பு செய்திகள் மாலை நேர மாநிலச்செய்திகள்!

மாலை நேர மாநிலச்செய்திகள்!

மாலை நேர மாநிலச்செய்திகள்! post thumbnail image
  • தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூர்க்கு குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இன்று தொடங்கி வைத்தார் .
  • பாரதிய ஜனதா-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் ட்ரோல் செய்து வருகிறது.
  • டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்துள்ளது.
  • பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதலுக்கும் நம் நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கும் எவ்வித தொடர்புமில்லை என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
  • பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்ததையடுத்து,20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி