இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல்

இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல்

இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் post thumbnail image
  • தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார்.
  • இந்துஸ்தானி இசை மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாய் இந்துஸ்தானி மேதை கிருணாச்சாரியாவிடம்இசை கற்க ஏற்பாடு செய்தார்.
  • ஆரம்பக் கல்வி மட்டுமே கற்ற இவர் ,தத்தோபன்ட் தேசாய் ,சவாய் கந்தர்வா உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் இசை கற்று சிறந்த இசைக்கலைஞர் எனப் போற்றப்பட்டார். பல நகரங்களில் இந்துஸ்தானி இசைக் கச்சேரிகள் நிகழ்த்தி , நாடு முழுவதும் இவரது புகழ் பரவியது.
  • 70 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த இவரது இசைப்பங்களிப்பிற்காக 1962ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத் நிருத்யா அகாடமி விருது பெற்றார் . பத்மபூசண், பத்ம விபூசண்,வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றார்.
  • பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்த காலக்கட்டத்தில் , தான் சிறந்த பாடகியாக வரவேண்டும் என்ற வைராக்கியத்துடனும் , பல தடைகளை எதிர்த்து கடுமையாகப் போராடி வற்றி பெற்ற கங்குபாய் ஹங்கல் 96வது வயதில் (2009) மறைந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி