பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மல்யுத்த வீரருக்கு இப்படி ஓர் ஆசையா?

மல்யுத்த வீரருக்கு இப்படி ஓர் ஆசையா?

மல்யுத்த வீரருக்கு இப்படி ஓர் ஆசையா? post thumbnail image

பல்கேரியாவில் சர்வதேச மல்யுத்த போட்டி நடந்தது. இதில் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ உடல் எடைப் பரிவில் அமெரிக்காவின் ஜோர்டான் ஆலிவரை 12-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.அதே சமயம் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ பிரிவின் இறுதிசுற்றில் 2-9 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் குயான்யூ பாங்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று .

வெற்றிக்கு பிறகு தங்க மகன் பஜ்ரங் பூனியா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தங்கப்பதக்கத்தை , பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய இந்திய விமானி அபிநந்தனுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர் என்னை வெகுவாக கவர்ந்துள்ளார் . அவரை சந்தித்து அவருடன் கைகுலுக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி