இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் !

மீ டூ சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா , பாடகி சின்மயியை போல ‘மீ டூ’ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசிகணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து லீனா அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“கடந்த 2005-ல் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போது, நிகழ்ச்சியை முடித்து வீட்டிற்கு செல்லும் போது, சுசி கணேசன் தன்னை காரில் அழைத்து சென்றதாகவும், அப்போது சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், அப்போது தன்னிடம் இருந்த கத்தியை வைத்து அவரிடம் இருந்து தப்பித்ததாகவும்” லீனா கூறியிருக்கிறார்.

லீனாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள இயக்குநர் சுசி கணேசன் ,

” லீனா மணிமேகலை – உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி, வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.

இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்து விட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ???

அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே, ஒருவர் தனியாக காரில் ஏறச் சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.

அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன் என்னை கொச்சைப்படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன்.

இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற #metoo-இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் “சமுதாய வைரஸ்களை” களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.

Social media நண்பர்களுக்கு – தயவுசெய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள் – உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர்.

இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார்.

கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்.” என்று பதில் அளித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

செல்வப்பெருந்தகை

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago