ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் !

விளம்பரங்கள்

ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.இதனை பிரபலப்படுத்த உருவாக்கப்பட்ட பாடலை ஷாருக்கான் நடிக்க ,ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குகிறார்.

வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் மூலம் ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த ஒரிசா அரசு முடிவு செய்தது.

இந்திப் பாடலாசிரியர் குல்சார் பாடல் வரிகளில் ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான இசை வீடியோவை ரகுமானே இயக்குகிறார்.

இந்தி நடிகர் ஷாருக் கான் நடிக்கும் இந்த பாடல் ‘ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா’ எனத் தொடங்கும்.இதற்கான படப்பிடிப்பு புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்தது. ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் முதன்முறையாக நடித்ததை மகிழ்வாகப் பகிர்ந்து வருகிறார் ஷாருக்கான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: