பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் ! post thumbnail image
சென்னை ஹைகோர்ட் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது . தற்போது இதில் விசாரணை நடந்து வருகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது.4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வருக்கு கீழே செயல்படக்கூடியது. எனவே இதில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.

ஆர்.எஸ் பாரதி வழக்கால், வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி