பொருளாதாரம்,முதன்மை செய்திகள் டாலர் இல்லாமல் ஈரானுடன் வர்த்தகம் : உலக பொருளாதாரத்தை கலக்கும் மோடி !!

டாலர் இல்லாமல் ஈரானுடன் வர்த்தகம் : உலக பொருளாதாரத்தை கலக்கும் மோடி !!

டாலர் இல்லாமல் ஈரானுடன் வர்த்தகம் : உலக பொருளாதாரத்தை கலக்கும் மோடி !! post thumbnail image
ட்ரம்பின் முட்டாள்தனமான முடிவுகளால் கலங்கி வருகிறது உலக பொருளாராதரம் ,ஈரான் மீது பல்வேறு தடைகள் உள்ள நிலையில் இந்திய இரானிடம் 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது .இதில் 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்காண பணத்தை எப்படி இந்திய கொடுக்கப்போகிறது என்பதில் தான் ட்விஸ்டே . அமெரிக்கா டாலர்களால் செலுத்த இயலாது .அமெரிக்கா ஈரான் மீது கொண்டுவந்துள்ள தடைகள் ,

  • அமெரிக்க டாலரை வாங்குவதற்கு தடை அமெரிக்க டாலர்களை சேமித்து வைக்க தடை.
  • தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வர்த்தகம் செய்யத் தடை.
  • அலுமினியம், இரும்பு, கிராஃபட் போன்ற அடிப்படை உலோகங்கள் வர்த்தகம் செய்யத் தடை.
  • நிலக்கரி போன்ற கனிமவளங்கள் வர்த்தகம் செய்யத் தடை.
  • ஈரானிய ரியால்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளத் தடை.
  • அரசாங்க கடன் பத்திரங்களை பிரசூரித்து கடன் வாங்கத் தடை.
  • ஆட்டோமொபைல்களை வர்த்தகம் செய்யத் தடை, ஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்த தடை.
  • கப்பல் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்த தடை.
  • மத்திய வங்கிகளோட மற்ற வங்கிகள் தொடர்பு கொள்ளத் தடை.
  • கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கத் தடை.
  •  நிறுவனங்களுக்கு இன்ஷூரன்ஸ் சேவைகள் வழங்கத் தடை .
  • எனர்ஜி துறை சார்ந்த பொருட்கள் வர்த்தகம் மேற்கொள்ளத் தடை.

இதனால் , அமெரிக்க டாலர்கள் மூலம் பணம் செலுத்த இயலாது . இந்திய ருபாய் மூலம் செலுத்தினால் அதை ஈரானால் மாற்றுவது கடினம்.எனவே குறிப்பிட்ட பகுதி பணமாக கொடுத்துவிட்டு மீதியை பண்டங்களாக கொடுக்கிறாராம் மோடி.

இரானிடம் அதிகமா வர்த்தகம் செய்வது சீனா .அதுவும் இதே முறையை தான் பின்பற்றி வருகிறது.சீனாவுக்கு அடுத்தபடியாக வர்த்தகம் செய்வது இந்தியா தான் .

அமெரிக்காவின் மிரட்டல்களையும் மீறி ஈரானுடன் வர்த்தகம் செய்வைத்து இந்தியாவும் சீனாவும் மட்டுமே.

யூகோ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி தான் இந்த ரிஸ்கான வேலையை செய்ய இருக்கிறது. இந்த இரண்டு வங்கிகளும் ஏற்கனவே ஈரான் மீது சர்வதேச தடை இருந்த காலங்களில், இந்தியா, ஈரானுக்கு செலுத்த வேண்டிய தொகையினை இந்திய ரூபாயாக செலுத்தி இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி