பப்ஜி கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஜி எனும் மொபைல் விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது
.கேம்மில் சிறுசிறு குட்டித்தீவுகள் அடங்கிய உள்ள ஒரு பெரிய தீவில் 100 பேர் களம் கண்டு, போர்களத்தில் போராடி யார் வெற்றி பெருகிறார்களோ அவரே வெற்றி பெருவார்.
பப்ஜி கேம் விளையாட கூடாது என கூறியதால் டெல்லியை சேர்ந்த சுராஜ் அலியாஸ் சர்னம் வெர்மா எனும் வாலிபர் பெற்றோரையே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ’ பெற்றோரை கொன்ற சுராஜ் அலியாஸ், பப்ஜி கேம் விளையாடி அதற்கு அடிமையானதால் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ரூம் வாடகைக்கு எடுத்து அங்கு கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் பள்ளி தேர்வுகளில் தோல்வியடைந்தார்.சுராஜ் செல்போன் பயன்படுத்த பெற்றோர் தடை விதித்துள்ளனர். இதனால் கேம் விளையாட முடியாத நிலைமையில் தனது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.
அதிகாலை எழுந்த அவன் தந்தையை கத்தியால் பலமுறை குத்தி உள்ளான்.சத்தம் கேட்டு அதே அறையில் தூங்கி கொண்டிருந்த அவன் தாய் எழுந்து அலறினார்.
அவரை ஒரு முறை குத்தியுள்ளான். பின்னர் சகோதரி அறைக்கு சென்று அவரை கழுத்தில் குத்தியுள்ளான்.
இதில் 3 பேரும் உயிரிழந்தனர். பின்பு கைகளை கழுவி தடயங்களை அழித்து , பொருட்களை உடைத்து போட்டு விட்டு அருகில் வசிப்போரிடம் வீட்டுக்குள் கொள்ளைக்காரர்கள் வந்துள்ளனர் என கூறியுள்ளான்.
இதனை நம்பாத போலீஸ் அவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்.தடவியல் சோதனை மூலம் அவன் மாட்டிக்கொண்டான் . ” என கூறினார்.
செல்போன் கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் தன் குடும்பத்தையே கொலை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே