பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் குற்றச்சாட்டை மறுத்த வைரமுத்து ! ஆதாரமின்றி தவிக்கும் சின்மயி !

குற்றச்சாட்டை மறுத்த வைரமுத்து ! ஆதாரமின்றி தவிக்கும் சின்மயி !

குற்றச்சாட்டை மறுத்த வைரமுத்து ! ஆதாரமின்றி தவிக்கும் சின்மயி ! post thumbnail image

தன்மீதான பாலியல் புகாரை மறுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து .இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை 2004ஆம் ஆண்டு படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறியிருந்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.இதுகுறித்து ட்விட்டரில் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது .

சின்மயிக்கு ஆதரவாக பலரும் ட்வீட் பண்ணியிருந்தனர்.திரைதுறையில் நடிகர் சித்தார்த் ,நடிகை சமந்தா ,குஷ்பூ,இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.மேலும் பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பாலியல் சீண்டல்களை சின்மயி மூலமாக பகிர்ந்து வருகின்றனர் .

அதில் நடன இயக்குனர் கல்யாண் ,கர்நாடக பாடகர்கள்,வாசிப்பாளர்கள்,சன் டிவி முன்னாள் ஊழியர் ரமேஷ் பிரபா உள்ளிட்டோரும் அடக்கம்.

சின்மயிக்கு எதிர்ப்பக்காகவும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.அதில், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும்,2004இல் நடந்த பிரச்சனைக்கு இப்போது என் வெளியே சொல்ல வேண்டும்,இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தார்.மேலும்,#Metoo எனும் அமைப்பை சின்மயி கொச்சைபடுத்துகிறார் என்றும்,இவரது பப்ளிசிட்டி ஆசையால் சாதாரண பெண்களின் குரல் ஒலிக்கவில்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

பட வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இவ்வளவு நாள் வைரமுத்துவை தூக்கி வைத்து கொண்டாடிவிட்டு இப்போது தூக்கி எரிய என்ன காரணம் என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இது எதற்கும் சின்மயி தரப்பிலிருந்து பதில் இல்லை.மழுப்பி வருகிறார்.

தனது கல்யாணத்துக்கு வைரமுத்துவை அழைத்துள்ள சின்மயி ,அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.மேலும் ட்விட்டரில் அவரும்,அவரது அம்மாவும் வைரமுத்துவை பாராட்டி பல்வேறு கட்டங்களில் ட்வீட் செய்துள்ளனர் .இதுவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது .

ஆண்டாள் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான வைரமுத்து மீது பழிவாங்க சின்மயி பகடைக்காயாக பயன்படுத்த படுகிறாரா ,என சந்தேகம் எழுந்துள்ளது .மேலும் ஆளுநர் விவகாரத்தை திசை திருப்பவே இவ்வாறு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் மக்கள் ட்விட்டரில் கூறுகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து வைரமுத்து கூறுகையில் ” அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று.

உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று கூறியுள்ளார்.இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் கூறினார் வைரமுத்து .அவர் பதிவை ரீட்வீட் செய்த சின்மயி வைரமுத்துவை பொய்யர் என கூறினார்.

இப்பிரச்னையால் தமிழ் ட்விட்டர் உலகு பரபரப்பாக காணப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி