ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!

விளம்பரங்கள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. பல நடவடிக்கைகள் எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த மாற்றமும் கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து வரும் இந்த சரிவு , இன்னும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த செப்.5 தேதி 72 ரூபாயாக இருந்தது அன்று முதல் படிப்படியாக உயர்ந்து இந்த மாதம் 73.34 ருபாய் ஆக வந்து நின்றது .இந்நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயை தாண்டியது .இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.01 ருபாய் ஆகும் .இது மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் .இந்திய வரலாறில் இல்லாத அளவுக்கு இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.RBI எவ்வளவு முயற்சி எடுத்தும் இவ்வாறு ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது .இதனால் ஆளும் பாஜக அரசின் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: