சந்தையை கலக்க வரும் #Realme2Pro

ஒப்போவின் துணை நிறுவனமான RealMe நிறுவனம் சந்தையில் பட்டையைக்கிளப்பி வருகிறது.முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட RealMe 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ரியல்மீ 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த மாதத்தில் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. நேற்றைக்கு Realme 2 Pro மற்றும் Realme C1 என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.சியோமி போலவே சந்தையை ஆக்கிரமித்து வருகிறது ரியல்மீ. இதே வேகத்தில் சென்றால் சியோமியை ஓரம்கட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சியோமி கையாண்ட அதே வர்த்தக நுணுக்கங்களையும் ,வாடிக்கையளர்களையும் ரியல்மீயும் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி வருகிறது.

Realme 2 Pro மற்றும் Realme C1

Qualcomm Snapdragon 660 புராஸசர் இதில் இருக்கிறது.ஒப்போவின் F9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்தது போன்று ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போனில் Dewdrop விஷயத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அதன் விலையை விட கிட்டத்தட்ட 10,000 ரூபாய் குறைவான ரியல்மீ 2 புரோவில் இதைக் கொடுத்திருக்கிறது ரியல்மீ. 6.3 இன்ச் டிஸ்ப்ளே இந்த விலையில் வேறு ஸ்மார்ட்போன்களில் கிடையாது. தொடக்கம் முதலே ஸ்மார்ட்போன்களில் லுக்கில் கவனம் செலுத்தி வருகிறது ரியல்மீ.

16 MP + 2 MP கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.3500 mAh பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ரியல்மீ. Realme 2 Pro ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் விற்பனைக்கு வருகிறது. 4GB RAM + 64GB 13,990 ரூபாய், 6GB RAM + 64GB 15,990 ரூபாய் மற்றும் 8GB RAM + 128GB 17,990 ரூபாய்.

Realme C1 ஸ்மார்ட்போன். 13 MP + 2 MP கேமராவும், முன்புறமாக 5 MP கேமராவும் இருக்கிறது. Qualcomm Snapdragon 450 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4230 mAh பேட்டரி நிச்சயமாக ஒரு நாளை தாண்டியும் தாக்குப்பிடிக்கும். ரியல்மீ 1 போல, இதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கிடையாது. அதற்குப் பதிலாக பேஸ் அன்லாக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 6,999 ரூபாய்.

 

 

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

செல்வப்பெருந்தகை

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago