மேக் இன் இந்தியாவை மத்தியஅரசு ஊக்குவித்துவருகிறது.இருப்பினும் எலக்ட்ரானிக் பொருட்கள் பெரும்பானவை இறக்குமதியே செய்யப்பட்டு வருகின்றன.இதை கட்டுப்படுத்தவே பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரியினை மத்திய அரசு உயர்த்தி வருகின்றது .ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், ஏசி, பிரிட்ஜ் கம்ப்ரசர்கள் 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், ஸ்பீக்கர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரேடியல் கார் டயர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.வைரங்கள்,ஜெட் எரிபொருள் மீதான சுங்கவரி தலா 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், பிளாஸ்டிக்கால் ஆன குளியலறை உபகரணங்கள், பாக்ஸ், பாட்டில், ஹாட் பேக், ஸ்டேஷனரி பொருட்கள், ஷீட், வளையல், சூட்கேஸ் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இவையனைத்தும் சேர்த்து மொத்தம் 86,000 கோடி மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.உலகளவில் நடக்கும் வர்த்தக போரும் இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. அமெரிக்கா இறக்குமதி இந்தியாவில் குறைந்துள்ளதால்,சீன இறக்குமதி அதிகரித்துள்ளது. இறக்குமதியை தடுக்கும் வகையில் இந்தியா வரி விதித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரிக்கும் எனவும், இந்திய உற்பத்தி ஊக்குவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே