சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில்,முருகதாஸ் இயக்கத்தில் , தளபதி விஜய் நடிக்கும் “சர்கார் ” திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.மெர்சல் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் சர்கார் .ரசிகர்களிடமும்,மக்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் வெகுநாட்களாக காத்திருந்தனர் .சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தது .இந்நிலையில், “சிம்டாங்காரன்” எனும் படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்டது .
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இப்பாடலை , கவிஞர் விவேக் எழுதியுள்ளார் . வழக்கமான ரகுமான் பாடல்கள் போல் வெளியானவுடன் மிகப்பெரிய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் , கேட்க கேட்க பாடல்கள் பிடிக்கிறது என ரசிகர்கள் தெரிவித்தனர் . சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களும் நடந்தேறின .வெளியான 17 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களால் Youtubeல் பார்க்கப்பட்டுள்ளது .
பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் கூறுகையில் ” சென்னை தமிழில் சிம்டாங்காரன் என்றால் “கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் ” Attractive Young Man – Charismatic / Fearless / Audacious ,கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் சிம்டாங்காரன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
படத்தின் இசை வெளியிட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது . அதற்காக போட்டிகளையும் சன் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே