நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .பிரதமர் மோடி மீதும் ,மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகளும்,மக்களும் பெரும் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.அப்படி என்னதான் நடந்தது இந்த ரபேல் விவகாரத்தில் ? விரிவாக பார்க்கலாம் .
ஆசிய கண்டத்தில் மிகவும் ராணுவ வலிமைமிக்க நாடான இந்தியா கடைசியாக போர் விமானங்கள் வாங்கியது எப்போது தெரியுமா ? 1996இல் . ஆம், 1996ல் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுகோய் விமானம் தான் கடைசி. பிறகு உள்நாட்டிலேயே தேஜஸ் எனும் இலகு ரக போர் விமானங்கள் பரிசோதிக்கப்பட்டு ,மிகவும் தாமதமாக 2016ல் தான் விமானபடையில் சேர்க்கப்பட்டது .2007ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு ,டெண்டர் கோரப்பட்டது .2012ஆம் ஆண்டு பல் வேறு போட்டிகளுக்கு மத்தியில் பிரான்சின் தஸ்ஸோ நிறுவனத்திடம் ரபேல் ரக விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது .அதில் , 18 விமானங்கள் பறக்க தயார் நிலையில் தரப்படும் என்றும் , 108 விமானங்கள் இந்தியாவின் அரசு நிறுவனமான HAL ( ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ) மூலமாக இந்தியாவிலே தயாரிக்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது .2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது .
அதன் பிறகு ஒப்பந்தம் சிறிது காலம் கிடப்பில் போடப்படுகிறது.2015ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி ,புதிய ஒப்பந்தம் ஒன்றை அறிவிக்கிறார்.அதன்படி , உடனடியாக பறக்கும் நிலையில் 36 போர் விமானங்கள் வாங்குவதெனவும் ,முந்தய ஒப்பந்தங்கள் காலாவதி ஆகிவிட்டதென அறிவித்தார்.2016ஆம் ஆண்டு ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது .
இதில் என்ன ஊழல் உள்ளது ?
1.முதலாவதாக மன்மோகன் சிங் ஆட்சியில் ரபேல்க்கு நிர்ணயித்த விலை சுமார் ரூ.526 கோடி . ஆனால் , மோடி ஆட்சியில் போட்ட ஒப்பந்தத்தின் படி விமானத்தின் விலை ரூ .1670 கோடி . மும்மடங்கு விலை அதிகம் என 2016 ஆம் ஆண்டு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது .
2.முந்தைய ஒப்பந்தத்தில் 108 விமானங்கள் உள்நாட்டில் தயாரிப்பதன முடிவாகி இருந்தது .ஆனால் ,இப்போது அனைத்து விமானங்களும் பிரான்சில் தயாராவது என ஒப்பந்தம் போடப்பட்டது.இதனால் மோடியின் மேக் இன் இந்தியா என்னவாயிற்று என சர்ச்சை எழுந்தது .
3.ஒப்பந்தத்தின் படி பிரான்சின் டசால்ட்ஸ் ஏவியேஷன் நிறுவனம் மற்றும் அதன் ஒத்துழைப்பு நிறுவனங்கள்,HAL ( ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ) ,DRDO ஆகியவை விமான தயாரிப்பில் ஈடுபடும் என வரையறுக்கப்பட்டது . ஆனால் , HAL புறக்கணிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .மேலே குறிப்பிட்ட அந்த ஒத்துழைப்பு நிறுவனம் தான் ரிலையன்ஸ் .
4.டெண்டர் இல்லாமல்,மதிப்பீடு ,தொழில்நூட்ப குழு, பரிசீலனை இல்லாமல் ஒப்பந்தந்தை மோடி தன்னிச்சையாக அறிவித்ததன் பிண்ணனி என்ன ?
5.பிரான்சில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் போது , தொடங்கப்பட்டு சில நாட்களே ஆன “ரிலையன்ஸ் டிபென்ஸ் ” அதிபர் அனில் அம்பானி கூடவே சென்றதன் பின்னணி என்ன ? HAL புறக்கணிக்கப்பட்டு ,எந்த முன்னனுபவமும் இல்லாத ரிலையன்சுக்கு ஏன் தஸ்சோ கூட்டாளி அந்தஸ்து வழங்க வேண்டும் ?
6.ரிலையன்ஸ் ஏன் கூட்டணியாக சேர்த்து கொள்ளப்பட்டது என அரசிடம் கேட்டால், “எங்கள் முடிவு அல்ல அது, பிரான்ஸ் நிறுவனதின் முடிவு ” என கூறியது . ஆனால் , இந்தியாவுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒல்லாந் என்ன கூறுகிறார் என்றால் ” ரிலையன்ஸை வற்புறுத்தி சேர்த்தது இந்தியா அரசு தான் ” என்கிறார்.இது பெரும் அதிர்ச்சியையும் ,திருப்பதையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊழல் புகார் தொடர்பாக அரசிடம் இருந்தோ ,பிரதமரிடம் இருந்தோ உரிய விளக்கம் தரப்படாதது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே