சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் துறைரீதியாக மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்றைய கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் மீது அமைச்சர் செல்லூர் ராஜு பதிலுரை வழங்கினார். அமைச்சர் பதிலுரை முடிக்கும்போது, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறுக்கிட்டுப் பேசினார். அப்போது பேசிய அவர். `அமைச்சர் செல்லூர் ராஜு எப்போதும் இல்லாத அளவில் உற்சாகமாக காணப்படுகிறார். நடிகர் சிவாஜியைப்போல வசனத்தைப் பேசுகிறார். வழக்கத்துக்கு மாறான மாற்றம் ஒன்று அவரிடம் தென்படுகிறது. மாடத்தில் அவரின் துணைவியார் அமர்ந்துள்ளார்; இதுவே அவரின் உற்சாகத்துக்குக் காரணம்’ என்று தெரிவித்தார். அவர் கூறியதுமே பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.
சட்டப்பேரவையில் எப்போதும் கலகலப்பை ஏற்படுத்தி வரும் துரைமுருகன் இன்றைய விவாதத்திலும் அதைச் செய்யத் தவறவில்லை. துரைமுருகனின் பேச்சைத் தொடர்ந்து பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், `அனைத்து எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர் செல்லூர்ராஜுவை முன் உதராணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு எல்லோருக்கும் நாம் செய்யும் தொழில்தான் தெய்வம். ஆனால், அமைச்சருக்கு அவரின் மனைவியே கண்கண்ட தெய்வம்’ என்று தெரிவித்தார். முன்னதாக அவர் ‘மாடத்திலே கண்ணி மாடத்திலே’ என்ற பாடலையும் குறிப்பிட்டுப் பேசினார். சட்டப்பேரவையின் இறுதியில் நடைபெற்ற இந்த விவாதங்கள் பேரவையை சிரிப்புடன் முடிக்க காரணமாய் அமைந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே