அரசியல்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம்

ஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம்

ஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம் post thumbnail image
நாளுக்குநாள் பாஜகவின் ஆதிக்கம் தமிழக அரசியலில் வலுத்துவரும் நிலையில், திராவிட கழகங்கள் அதிர்ச்சியில் உள்ளன என்கிறாரகள் அரசியல் நோக்கர்கள். மோடியின் அரசியல் ராசதந்திரத்துக்கு அதிமுக வெளிப்படையாக ஆதரவளித்து நிலையில் திராவிட இயக்கங்கள் மாற்று அரசியலை விரைவில் கையெடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

நீண்ட காலமாக தமிழக சட்ட மன்றத்தில் பாரதீய சனதா கட்சி இடம்பெற வேண்டும் என்பது அக்கட்சியின் நீண்ட கால ஆசை, அதை எப்படியாவது மோடி மூலமாக இப்போது நிறைவேற்றப் பார்க்கிறது தமிழக பாரதீய சனதா கட்சி, ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்போடு மட்டும் இல்லாமல் பாரதீய சனதா கட்சி, தமிழக ஆட்சியையும் கைப்பற்ற மிக பெரிய திட்டமிட்டுள்ளது.

மோடியின் கை அசைவுக்கு தான் தமிழக முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றனர். இருவரையுமே மோடி தன் வசத்தில் வைத்துள்ளார் என்பது திண்ணம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் பிரதமர் மோடி திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த ஒருவரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்கக் கூடாது என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பைக்காட்டி வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் தமிழக அரசும் மத்திய அரசும் கவலை கொள்ளவதாக தெரியவில்லை. மோடியின் தமிழக வருகை மூலம் பாரதீய சனதாவின் தமிழக சட்ட மன்ற நுழைவு சாத்தியமாக போவதாக பெரும் கனவில் பாரதீய சனதா கட்சி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி