செய்திகள் 44 ஆண்டுகளாக நடந்து வந்த பன்றிச்சண்டை ரத்து!…

44 ஆண்டுகளாக நடந்து வந்த பன்றிச்சண்டை ரத்து!…

44 ஆண்டுகளாக நடந்து வந்த பன்றிச்சண்டை ரத்து!… post thumbnail image
மேடிசன்:-அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 44 ஆண்டுகளாக ஒரு விநோதமான விஷயம் அரங்கேறி வருகிறது. ஸ்டீபன்ஸ்வில்லியில் உள்ள புனித பேட்ரிக் கத்தோலிக்க தேவாலயம் சார்பில் வருடந்தோறும் ‘அசல் பன்றிச் சண்டை’ என்ற விழா நடைபெறும். ரத்தம் தெறிக்கும் இந்த விழாவில் முரட்டுத்தனமான வாலிபர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு பாவப்பட்ட பன்றியை தாக்குவர்.

இதனால் வெறியாகும் பன்றியும் திரும்ப தாக்கும். மாறி மாறி 3 மணி நேரமாக நடைபெறும் இந்த சண்டையில் பன்றியை கொண்டு போய் ஒரு பெரிய வாளிக்குள் போட்டால், வாலிபர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.ஒரு வேளை இந்த 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த பன்றி உயிரோடு இருந்தாலும், பன்றிச்சண்டை முடிந்த பின் அனைத்து பன்றிகளையும் கொன்றுவிடுவார்கள்.
இந்த வருடத்திற்கான பன்றிச்சண்டை வருகிற ஆகஸ்ட் மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சிக்கு பிராணிகள் நல ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், இந்த வருடம் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.

80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் எதிர்ப்பை பதிவு செய்ததையடுத்து, இந்த ஆண்டு பன்றிச்சண்டையை ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக சேற்று கால்பந்து போட்டியை நடத்த இருப்பதாக பேட்ரிக் தேவாலயம் அறிவித்துள்ளது. இது, வருடந்தோறும் பன்றிச்சண்டையை பார்க்க வரும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும், பங்குபெறும் முரட்டு வீரர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி