வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ் 2!…

ஹாலிவுட்:-ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன்மேன் என்று பல சூப்பர் ஹீரோக்கள் ரவுண்டு கட்டி ரகளை செய்யும் திரைப்படம் தான் ’அவெஞ்சர்ஸ்’. 2012-ல் இதன் முதல் பாகமான ’அவெஞ்சர்ஸ் அசம்பிள்’ வெளியாகி பாராட்டிலும், வசூலிலும் சக்கை போடு போட்டது.

இந்த சீரிஸின் இரண்டாவது பாகமான, ’அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ இந்தியாவில் நேற்று வெளியானது. ’ஸச் எ மைண்ட் ப்ளோயிங் மூவி’ என்று இங்கிலீஷ் பீட்டர்களும், ’ஹல்க் கலக்கிட்டாம்பா’ என்று லோக்கல் ஆடியன்சும் ஒரு சேர இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர். சுருக்கமாக முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் இன்னும் சிறப்பாகவே வந்திருப்பதாகவே படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருதுகிறார்கள்.

வெளியான இரண்டே நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அவெஞ்சர்ஸ்-2. இன்னும் 2 நாட்களில் (வார விடுமுறை என்பதால்) வசூலில் 1020 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ் ஓபனிங், மற்றும் பாசிடிவ் விமர்சனத்தை வைத்துப் பார்க்கையில் இந்த வருடம் வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஃப்யூரியஸ் 7 படத்தின் வசூலை இப்படம் தாண்டும் என்பதே பலரது நம்பிக்கையாக இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago