தமிழகத்தில் இப்படம் ஒரு நாள் முன்கூட்டி ஏப்ரல் 2ஆம் தேதியே வெளியிடப்பட்டது. முந்தைய பாகங்களின் வெற்றி, பால் வாக்கரின் திடீர் மறைவு, ஜேஸன் ஸ்டேத்தம், டோனி ஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் புதிதாக இப்படத்தில் இணைந்தது என இந்த 7ஆம் பாகத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.
இப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகமெங்கும் 67 மில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட 420 கோடி ரூபாய்) வசூலித்தது. அதோடு முதல் 3 நாட்களில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதில் இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான முதல் 17 நாட்களில் மட்டுமே 1 பில்லியன் டாலர்களை (தோராயமாக 6250 கோடி ரூபாய்) வசூலித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு அவதார் திரைப்படம் 19 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை எட்டியதே சாதனையாக இருந்து வந்தது. அதை இப்போது ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் இந்த 7ஆம் பாகம் முறியடித்திருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த வசூலில் கிட்டத்தட்ட 2.8 பில்லியன் டாலர்களை (17500 கோடி ரூபாய்) வசூல் செய்து அவதார் படமே இன்னும் முதலிடத்தில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்த உலக வசூலில் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் இந்த 7ஆம் பாகம் 7வது இடத்தில் இருக்கிறது. அவெஞ்சர்ஸின் வசூலை முறியடித்து இப்படம் 3ம் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இடத்தைப் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே