செய்திகள்,திரையுலகம் ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!…

’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!…

’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!… post thumbnail image
சென்னை:-கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லன்களாக, பசுபதி, ஜாக்கி ஷெராப் இருவரும் நடிக்கின்றனர். மற்றும் சம்பூர்ணேஷ் பாபுவும் முக்கிய வேடங்களில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு சரியாக 12 மணி அளவில் 10 எண்றதுக்குள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதைத்தொடர்ந்து விரைவில் 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர், டிரெய்லரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி