‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…

சென்னை:-தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் பாகுபலி திரைப்படம் அதன் இறுத்திக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும், அவந்திகாவாக தமன்னாவும் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. பிரபாஸ் பங்கேற்கும் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. இனி இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்கும் என தெரிகிறது. இப்படத்தை இவ்வருட கோடைக்கால விருந்தாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Scroll to Top