செய்திகள்,விளையாட்டு வங்காளதேச பயணத்தை இந்திய அணி ரத்து செய்யுமா?…

வங்காளதேச பயணத்தை இந்திய அணி ரத்து செய்யுமா?…

வங்காளதேச பயணத்தை இந்திய அணி ரத்து செய்யுமா?… post thumbnail image
மும்பை:-உலககோப்பை கிரிக்கெட்டில் கால் இறுதியில் இந்தியாவிடம் வங்காளதேசம் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் ரோகித்சர்மாவுக்கு வீசப்பட்ட பந்தை இடுப்பு மேலே வந்தது என்று அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தார். ரோகித்சர்மாவுக்கு நடுவர் அவுட் கொடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் (ஐ.சி.சி) வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவருமான முஸ்தபா கமால் கடுமையாக விமர்சித்தார். அம்பயர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும், ஐ.சி.சி. மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார்.

உலககோப்பை பரிசளிப்பு விழாவில் ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்க முஸ்தபா கமாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்பயர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட் வாரியம் மீது நேரடியாகவே முஸ்தபா கமால் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல்படுகிறது என்றார்.

இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதம் வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வங்காளதேச தொடர் குறித்து அவசர ஆலோசனை நடத்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தை கூட்ட முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முஸ்தபா கமால் சர்ச்சை குறித்தும், வங்காளதேச பயணத்தை ரத்து செய்யலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் வங்காளதேச பயணம் கேள்வி குறியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி